அண்மைக் காலமாக தமிழ் சினிமாத் துறையில் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் பிரபுதேவா நயன்தாரா காதல். எனக்கும் இது ஒரு தேவை இல்லாத விஷயம் தான். இருந்தாலும் ஒரு சில விடயங்கள் சொல்ல தோன்றுகிறது.
பிரபு தேவா ஏற்கனவே திருமணமானவர் என்பதால் தான் இந்த காதலுக்கு இவ்வளவு எதிர்ப்பு. பத்திரிகைகள் மற்றும் ஏனைய அனைத்து ஊடகங்களும் அவர்களை திட்டித் தீர்கின்றன. அதிலும் நயன்தாரவிட்கு அதிகம். பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணின் வாழ்கையை கெடுக்கிறார் என்பதே இந்த திட்டுபவர்களின் கருத்து.
யார் என்ன சொல்லி என்ன செய்வது? இத்தனை ஆண்கள் இருக்கும் போது பிரபுதேவாவிடம் தான் நயன்தாரவிட்கு காதல் வந்துள்ளது. (நிச்சயமாக அவனின் முகத்திற்காக இருக்க முடியாது. மனசுக்காகவாத் தான் இருக்கனும்). திருமணம் ஆனாலும் எதோ தன் மனைவியிடம் இல்லாத ஒன்று நயனிடமிருந்து அவனையும் ஈர்த்துவிட்டது போல.
அவங்களுக்கே இதெல்லாம் பிரச்சினை இல்லாட்டி நாம ஏன் இதையெல்லாம் பெரிசு படுத்தணும். நம்ம ஆசிய சனம் தேவையான விடயங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இந்த அடுத்தவர்களின் சொந்த விடயங்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
யார் என்ன சொன்னாலும் காதல் யாருக்கு எப்போது யாருமேல் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதை அழகாக காட்டிய ஒரு திரைப்படம் தான் கண்டேன் காதலை.
ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை, இன்னொருவரை தான் பிடிக்கிறது என்று தெரிந்த பின்பும் அந்த நபரை நம்மிடமே வைத்துக்கொள்ள முயற்சிப்பதில் என்ன பயன்? நம்மிடம் இருந்தாலும் மனது வேறொருவரிடம் அல்லவா இருக்கிறது. என்னவோ சொல்லுவது இலகு தான். அனால் இதை செய்வது கடினம். தெரியும்.
ஆனால் நம்மை வேண்டாம் என்று சொல்லிய ஒருவரை வற்புறுத்தி வைத்துக்கொள்ளுவதில் ஒரு பயனுமில்லை. இருவரும் சந்தோஷமாக இருக்க போவதில்லை. ஆகவே யாரவது ஒருவராவது சந்தோசமாக இருந்திட்டு போகட்டுமே!!!
0 comments:
Post a Comment