நம்மில் பல பேர் எதாவது ஒரு பிரச்சினை, கவலை என்று வந்தவுடன் சொல்லும் ஒரு வார்த்தை தான் என்ன வாழ்க்கை டா இது.. ஆனால் நான் இந்த தலைப்பை சுட்டது சிம்புவிடமிருந்து... (வானம் - சிம்பு ).
வாழ்க்கை என்பதற்கு பத்து பேரிடம் வரைவிலக்கணம் கேட்டால் பத்து வரைவிலக்கணம் கிடைக்கும். ஒவ்வொருவரும் வாழும் விதம், வாழ்கையை அனுபவிக்கும் விதம் வேறுபட்டவை. சிலர் நல்லதோ கேட்டதோ நமக்கு பிடிச்சிருந்தால் சரி என்ற நோக்குடன் வாழ்பவர்கள். இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் சிந்தித்து எதிலுமே நல்லது கேட்டது எது என ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பவர்கள். ஆனால் எப்படி வாழ்ந்தாலும் எல்லோருக்கும் வாழ்கையில் பிரச்சினை வர தான் செய்யும். சிலர் பிரச்சினை என்றவுடன் அதில் தப்பி போக யோசிப்பார்கள். இன்னும் சிலர் அதை எப்படியாவது எதிகொள்ளும் வகையினர்.
நிறைய சந்தர்பங்களில் நானும் என்ன வாழ்க்கை டா இது என்று யோசித்ததுண்டு. ஒரு சின்ன விஷயத்திற்கும் கவலை படும் சுபாவம் எனக்கு உண்டு. ஆனால் கொஞ்சம் நேரத்தில் மீண்டும் சரி ஆகி விடுவேன். அதையே நாள் கணக்கு நினைத்துக்கொண்டு இருப்பதில்லை. ஆனால் வாழ்கையில் ஒரு சிலவற்றை மறக்க முடியாது. எல்லோர் வாழ்கையிலும் எதோ ஒரு பசுமையான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். சிலர் அதையே நினைத்துகொண்டு எதிர்காலத்தையும் வீணடித்துவிடுவார்கள்.
வாழ்கையில் நாம் சிலவற்றை புரிந்து கொள்ளுவது இல்லை. புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. அதிக நேரங்களில் செய்வது கிடைக்காத ஒன்றை தேடி உள்ளதையும் கோட்டை விடுவது. நம்மை தேடி வருவதை / வருபவர்களை நாம் புரிந்து கொள்ளுவது இல்லை. நாம் தேடி போவதை / போறவர்களை அவர்கள் புரிந்து கொள்ளுவது இல்லை. சில நேரங்களில் நாம் நல்லவர்கள் என்று நினைத்து நம்புபவர்கள் தான் வினையாக வருபவர்கள். சரியில்லை என்று நினைத்து பழகுபவர்கள் தான் விசுவாசமானவர்கள். இது தான் வாழ்கையின் நியதியா??
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், இப்படி சொல்லுகிறார்களே, நம்மை பற்றி தப்பாக நினைப்பார்களோ என்றெல்லாம் எண்ணாமல் நமக்கு சரியென பட்டதை (மற்றவர்களை நோகடிக்காது, மன சாட்சிக்கு உகந்த வகையில்) செய்து மகிழ்ச்சியாக இருப்பது தான் சிறந்த வழி.
பிறப்பு எம் கையில் இல்லை. ஆனால் பிறப்புடன் கிடைத்த வாழ்க்கை நம் கையில். அதை மகிழ்சிகரமாக மாற்றிக்கொள்ளுவதும், சோகமயமாக அமைத்துக்கொள்ளுவதும் நம் கையில் தான் உண்டு.
hii... hii....
ReplyDeleteHi :)
ReplyDeleteஎன்ன வாழ்கை டா இது !!!!
ReplyDelete:)
ReplyDelete