Wednesday, March 21, 2012

வெட்டியா இருக்கும் பொது என்ன என்ன எல்லாம் பண்ண தோணுது???

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று ஒரு பதிவு எழுதுகிறேன். வீட்டில் வெட்டியாக இருந்து ரேடியோ கேட்டுக்கொண்டு இருக்கும்போது தான் இப்படி எழுத வேண்டும் என்ற நினைவு வந்தது.

அண்மைக் காலத்தில் வெளிவந்த ஒரு சில பாடல் வரிகளும் அதனை கேட்கும் பொது எனக்குத் தோன்றியதும் :)




ஆணோட காதல் கை ரேக போல. பெண்ணோட காதல் கை குட்ட போல.


ஆண்கள் இப்படியெல்லாம் பாட்டு பாடுவாங்கன்னு தெரிஞ்சு தான் பொண்ணுங்க கைக்குட்டை பாவிக்காம tissue பாவிக்க ஆரம்பிச்சிட்டாங்களோ...



இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த


ம்ம்ம் என்னோட birth certificate 'a  எடுத்து பாத்துக்கோ


 அடி தேக்கு மர காடு பெருசுதான்.சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்


இது கூட தெரியாத மக்குனு நினைச்சியா என்னைய?? உனக்கு இப்போ தெரிஞ்சாலும் எனக்கு இதெல்லாம் எப்போவோ தெரியும்.


மிளகாயப் போல பேசாம,மெதுவாக அன்பா நீ பேசு


எந்த நாட்டுல சார் மிளகாய் பேசும்? எனக்கும் சொல்லுங்களே...


உன் மழையில் நனைந்தாலே, காய்ச்சல் பறந்தோடும்


நாளைல இருந்து காய்ச்சல்காரங்களை எல்லாம் என்கிட்டே அனுப்பி விடு.









1 comment: