Wednesday, May 11, 2011

தெய்வம் வாழ்வது எங்கே ??? தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்......

அழகான பாடல் வரிகள். இந்த வரிக்குள் தான் எத்தனை அர்த்தங்கள் புதைந்துள்ளன. உலக மக்களை இரு வகையாக வேறுபடுத்தலாம். கடவுளை நம்புவோர் ஒரு வகை. நம்பாதோர் இன்னொரு வகை.

கடவுளை நம்புகிறோம எல்லைய என்பது முக்கியமல்ல. கடவுளை நம்புவதில், வணங்குவதில் எந்த தவறுமில்லை. என்னைப் பொறுத்தவரையில், நாம் ஒவ்வொரு சமயத்தினரும் ஒவ்வொரு பெயர் கொண்டு கடவுளை போற்றி வணங்கினாலும் கடவுள் ஒருவரே. எல்லா சமயத்தினதும் பொருள்  " நன்மை செய். தீங்கு இழைக்காதே". கடவுளுக்கு முருபெயர் "அன்பு " என்று சொல்லலாம். எங்கெல்லாம் தூய அன்பு குடிகொண்டுள்ளதோ அங்கெல்லாம் கடவுள் வாழ்கிறார்.

நம்மில் பலர் தீவிர கடவுள் பக்தர்கள் (???). ஆனால் மனது முழுக்க பொறமை, கோபம், சுயநலம், வேற்றுமை..... ஆலயம் சென்று ஆயிரக்கணக்கில் காணிக்கை செலுத்துபவர்கள் அயலவனின் பசியைப் போக்க அதில் ஒரு சதவீதமாவது செலவிட மாட்டார்கள். இதனால் என்ன பயன்? இப்படியானவர்களுக்கு உண்மையிலேயே கடவுள் அருள் உண்டா?

தூய அன்பு கொண்டு, தவறுகளை உணர்ந்து வாழும் ஒவ்வொரு மனிதன் நெஞ்சிலும் கடவுள் வீற்றிருக்கிறார். கடவுளைத்  தேடி ஆலயம் செல்கிறோம். ஆனால் நம் பக்கத்திலிருக்கும் மனிதன் நெஞ்சில் வாழும் கடவுளை நாம் காண்கிறோமா?? அன்புக்கு உருவமில்லை. அதேபோல் கடவுளும் எந்த உருவத்திலும் வரலாம். அம்மாவை தெய்வத்தின் மறு உருவமாக தரிசிப்போர் பலர். அது ஏன்? அந்த தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம் எல்லாம் ஒன்றாக பின்னிப் பிணைந்து தாயை கடவுளாக எண்ண வைக்கின்றது.

அதேபோல் தூய ன்பு கொண்டு வாழ்வோர் ஒவ்வொருவரிடமும் நாம் கடவுளை காணலாம். நாம் பிறரிடம் கடவுளை காண முயற்சிப்பது போல் நாமும் பிறருக்கு எதோ ஒரு வகையில் கடவுளின் உருவாக இருக்க முயற்சிப்போம்.

0 comments:

Post a Comment